சூர்யாவை எதிர்க்க தயாரான தமன்னாவின் காதலர்- ‘சூர்யா43’ அப்டேட்.

photo

சூர்யாவின் 43வது படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் தயாராகும் இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதால் இயக்குநர் சுதா கொங்கரா உடன் கைகோர்த்துள்ளார். ‘சூர்யாவின் 43’வது படமாக தயாராகும் அந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

photo

தொடர்ந்து அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகையான நஸ்ரியா நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் துல்கர் சல்மானும் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய தகவலாக படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகரான விஜய் வர்மா நடிக்க உள்ளாராம். இவர் மில்க் பியூட்டி தமன்னாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story