விஜய்- வெற்றிமாறன் கூட்டணி…! – சூப்பர் தகவல் சொன்ன பிரபல இயக்குநர்.

photo

தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறம். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விடுதலை. வரும் 31ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

photo

இந்த படத்தின் தரமான டிரைலரை பார்த்தபின் ரசிகர்கள் படத்தை காண மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சூரி கதையின் நாயகநாக நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், சேட்டன், இளவரசு, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட டாணாக்காரன் பட இயக்குநரான தமிழ், விடுதலை படம் குறித்த தனது  அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக செம தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.


 

நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ‘ சூர்யாவின் வாடிவாசல் உறுதி என தெரியும் சார், ஆனால் விஜய் மற்றும் கமல்ஹாசன் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிவருகிறது, அது எந்த அளவிற்கு கண்ஃபாம் ?’ என கேட்க “ விஜய் அண்ணா கூட படம் கண்ஃபாம் தான் சொல்றாங்க, ஆனா கமல் சார் கூட என்ன நிலவரம் என்று தெரியவில்லை” என பதிலளித்துள்ளார். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story