உடைந்துப்போன 'அஜித்' – ஆறுதல் கரம் நீட்டிய 'விஜய்'.

photo

 நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

photo

கடந்த 3ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அஜித்தின் தந்தை தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமாதுறையினர் இரங்கல் தெரிவித்தனர். விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

photo

இதனையடுத்து சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் அஜித்தின் தந்தை உடல் தகனம் செய்யடப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் குவிந்ததால் பாதுகாப்பிற்காக போலீஸ்ஸார் குவிக்கப்பட்டனர். தந்தையை தகனம் செய்துவிட்டு வீடுதிரும்பிய அஜித்தை நடிகர் விஜய்  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். நேற்று காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய் தந்தையை இழந்துவாடும் அஜித்திற்கும் அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியது அவர்களது நட்பை பிரதிபளிப்பதாக பலரும் கூறிவருகின்றனர். 

Share this story