சினிமா கதைகளை மிஞ்சும் ‘விஜய்யேசுதாஸ்’நகை திருட்டுவிவகாரம்! சந்தேக வளையத்திற்குள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ட்ரைவர்.

photo

ஐஸ்வர்யா ரஜினிகாந்த வீட்டில் நகை திருடுப்போன சம்பவத்தை தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகை திருடுப்போய் சினிமா வட்டாரத்தில் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இந்த நிலையில் சமீபத்தில் வந்த தகவல்படி சினிமா கதைகளை மிஞ்சும் அளவிற்கு விஜய் யேசுதாஸ் வீட்டு  நகைதிருட்டு விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் ட்ரைவர் சிக்கியுள்தாக தகவல் வெளியகியுள்ளது.

photo

தனது வீட்டில் 60 சவரன் நகை காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த புகார் கொடுத்த நிலையில் அவரது வீட்டு பணிப்பெண் மற்றும் ட்ரைவர் திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 140 சவரன் மீட்கப்பட்டது. அதன்பின்னர்தான் 200 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு புகாரையும் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

photo

அடுத்ததாக,  விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்புள்ள, தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா சென்னை அபிராமிபுரம் போலீசில் புகார் கொடுத்தார்விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் சிக்கிய  ட்ரைவரான வெங்கடேஷ் இதற்கு முன்னர்  விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் பணியாற்றியுள்ளாராம்; அதுமட்டுமல்லாமல், அவசரத்திற்கு ட்ரைவர் தேவைப்பட்டால் விஜய் யேசுதாஸ் விட்டிற்கு சென்றுவருவதை வழக்கமாக  வைத்துள்ளார். கூடுதல் தகவலாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த பெண், வேலைய விட்டு நின்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பல  திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story