33வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்... இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நேரில் வாழ்த்து !

vijayakanth

 விஜயகாந்த் - பிரேமலதா ஜோடி தனது 33வது திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாக கொண்ட அவர், 1979-ஆம் ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், செந்தூரப்பூவே என அடுத்தடுத்து சூப்பர் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாக நடிகராக மாறினார். 

vijayakanth

பிசியான நடிகராக இருந்த விஜயகாந்த், தேமுதிக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இருந்தார். அதன்பிறகு தேர்தலில் அமோக வெற்றிப்பெற்று விருதாச்சலம் மற்றும் ரிஷிவந்தியம் என அடுத்தடுத்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் உடல் நலக்குறை ஏற்பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

vijayakanth

இதற்கிடையே கடந்த 1990-ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தங்களது 34வது ஆண்டு விஜயகாந்த் - பிரேமலதா தம்பதி இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி விஜயகாந்திற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று முன்னணி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சென்று விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story