“வெளியே போ… வெளியே போ….”- கேப்டன் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஆவேசம்.

photo

மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய்யை நோக்கி ‘வெளியே போ… வெளியே போ…’ என விஜயகாந்தின் ரசிகர்கள் முழக்கமிட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

photo

மக்களின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


அப்போது அங்கிருந்து சென்ற விஜய்யை நோக்கி ‘வெளியே போ… வெளியே போ…’ என விஜயகாந்தின் ரசிகர்கள் முழக்கமிட்டுள்ளனர். கேப்டன் உயிருடன் இருக்கும் போது வந்து பார்க்காமல்  இப்போது ஏன் வந்தீர்கள் என விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் இருந்த சிலதான் இவ்வாரு கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.

Share this story