அஞ்சலி செலுத்த சாரை சாரையாய் குவியும் தொண்டர்கள் – இறுதி சடங்கு எப்போது?

photo

உடல்நலம்குறைவால நம்மை விட்டு சென்ற கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கு எப்போது நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

ரீல் ஹீரோவாக மட்டுமல்லாது ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரது மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கேப்டன் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது தமிழக அரசு.  இந்த நிலையில் பொதுமக்கள், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் இன்றும், நாளையும் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.

photo

தொடர்ந்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.  

Share this story