விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Share this story