'விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை….'- மருத்துவமனை அறிக்கை.

photo

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக  இல்லை என மருத்துவமனை நிர்வாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

photo

நடிப்பிலிருந்து அரசியலுக்கு தாவிய விஜயகாந்த் தொடர்ந்து சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அரசியலிலிருந்து ஓய்வெடுத்து வரும் அவர் அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதல் “திரு.விஜய்காந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24மணி நேரத்தில்  அவரது உடல்நிலை சீரான நிலையில் இலாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாக கூறியுள்ளது.

Share this story