விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்.

photo

கேப்டன் விஜய்காந்த் காய்ச்சல், இருமல், மற்றும் மார்பு சளி காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

photo

கடந்த 18ஆம் தேதி கேப்டன் விஜய்காந்த் உடல்நலகுறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக வந்த தகவலை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது மேலும் விஜய்காந்தின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சில தினங்கள் அவர் கண்காணிப்பில் இருந்த பிறகு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது தொண்டர்கள், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this story