சும்மா ஜம்முனு போஸ் கொடுத்த கேப்டன்…..-வைரல் கிளிக்ஸ்.

photo

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல் நிலைகுறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை வருத்தமடைய செய்கிறது. இந்த நிலையில் “ கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்ட விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் சும்மா கூலிங் கிளாஸ் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார் விஜயகாந்த். இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

Share this story