விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட டீசர் இதோ!.....

photo

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

photo

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தனா எழுதி இயக்கியுள்ள படம் ‘ஹிட்லர்’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். கதாநாயகியாக ரியா சுமன் இணைந்துள்ளார். பொலிடிகல் திரில்லராக  தயாராகவுள்ள இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். நவீன் குமார் ஒளிபதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த நான்கு மாத்திற்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

Share this story