ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் -ரசிகர்கள் படை எடுக்கும் படை தலைவன் .

vijaykanth-44

ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்னர் சினிமாவில் பல புரட்சிகள் நடந்து வருகிறது .அந்த வகையில் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள படை தலைவன் படத்தில் ஏ ஐ மூலம் மறைந்த நடிகர் விஜய காந்த் நடித்துள்ளார் 
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்துள்ளார். இப்படத்தை ஜெகநாதன் பரமசிவன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், கருடன் ராம், யூகிசேது, அருள்தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 இப்படத்தில் ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்தும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படம் 500க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இப்படம் சோசியல் மீடியாவில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது .
 

Share this story