விஜயகாந்த் மகன் ஹீரோவாக நடிக்கும் 10 வது படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
விஜயகாந்த், பிரேமலதா தம்பதியின் இளைய மகன் சண்முக பாண்டியன், திரைக்கு வந்த ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’, ‘கொம்புசீவி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது திரு எழுதி இயக்கும் ‘வாணவேடிக்கை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் எல்.கே.சுதீஷ் எம்.பி., தனது 10வது படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினார். சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் டைட்டில் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். முன்னதாக சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தை இயக்கியிருந்த மணி சேயோன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, மனு ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். இவர் இயக்குனரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர். தற்போது ‘ரேனிகுண்டா 2’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்

