இன்று வெளியாகிறது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ முழு பாடல்.. எப்போ தெரியுமா??

இன்று வெளியாகிறது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ முழு பாடல்..  எப்போ தெரியுமா??


வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் இன்று மாலை வெளியாகிறது.

தெலுங்கு  இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் இன்று மாலை 5. 30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில்,  தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் ராஷ்மிகா மந்தனாவும் இடம்பெற்றுள்ளார்.  ஆம் வாரிசு திரைப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.

varisu - Vijay
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இந்தப் படத்தில்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா   உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு  பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இதனையொட்டி வாரிசு படத்தை   எதிர்ப்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.  இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.  

varisu

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்  வெளியிட திட்டமிட்ட படக்குழு,  முதல் பாடலுக்கான ப்ரோமோவை கடந்த 3ம் தேதி மாலை  6.30 மணிக்கு வெளியிட்டது. ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ எனத்தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். ப்ரோமோ வீடியோ வெளியான  26 நிமிடங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு  முழுப் பாடலும் வெளியாக உள்ளது.


 


 

Share this story