விஜய் ரசிகர்கள் அட்டூழியம்... நாசமடைந்தது ரோகிணி திரையரங்கம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. விஜயுடன், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Rohini Cinemas completely thrashed by Joseph Vijay fans after #LeoTrailer screening. pic.twitter.com/vQ9sd6uvJg
— Manobala Vijayabalan (@ManobalaV) October 5, 2023
இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று படக்குழு முன்னோட்டத்தை வெளியிட்டது. வெளியான 5 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து லியோ ட்ரைலர் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், ரோகிணி திரையரங்கிற்கு முன்னோட்டம் பார்க்க வந்த ரசிகர்கள், இருக்கைகளை கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர். சேதமடைந்த ரோகிணி திரையரங்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.