இறுதிக்கட்டத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’...!

விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகின்ற மே மாதம் 2ம் தேதி கொடைக்கானலில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்வெளியாகி உள்ளது. . விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.