பீஸ்ட் படத்தில் விஜய்யின் லுக் டெஸ்ட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் லுக் டெஸ்ட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இதுவே அவருடைய கடைசி படம். இதன்பின் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The uber cool Look Test of Veera Raghavan🖤🔥#Beast pic.twitter.com/ke4RFXYSUG
— Sun Pictures (@sunpictures) April 1, 2025
இந்நிலையில், விஜய் - இயக்குநர் நெல்சன் கூட்டணியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். அந்த படத்தில் விஜய் வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.