100 மில்லியன் பார்வைகளை கடந்த விஜய்யின் ‘மட்ட’ பாடல்
Tue Apr 08 2025 8:52:02 AM

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்தின் ‘மட்ட’ பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது.
இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய ‘மட்ட’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் - த்ரிஷா காம்போ நடனம் ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் இந்த பாடலை யூடியூப்பில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.