ஏப்ரலில் ரீ- ரிலீசாகும் விஜய் நடித்த 'சச்சின்'

விஜய் - ஜெனிலியா நடித்த சச்சின் திரைப்படம் ஏப்ரல் 18ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சச்சின் திரைப்படம். இவர்களுடன் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
Sachein is all set for a grand worldwide release on April 18th!
— Kalaippuli S Thanu (@theVcreations) March 21, 2025
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam @bipsluvurself#ThotaTharani #VTVijayan #FEFSIVijayan #SacheinMovie @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl… pic.twitter.com/WbzzkAhSXR
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பெருமளவு ஹிட்டானது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்துடன் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. அதன்படி ஏப்ரல் 18ஆம் தேதி சச்சின் ரீ - ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.