ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு the Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
— Vijay Fans Trends (@VijayFansTrends) January 10, 2024null
இந்நிலையில், ரசிகர்களுடன் நடிகர் விஜய் தற்போது செல்பி எடுத்துக் கொண்ட காணொலியும், அந்த செல்பி புகைப்படமும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.