பிரபல அரசியல் தலைவரின் இல்ல விழாவில் பங்கேற்க வந்த விஜய்யின் மகன்...

vijay

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், பொதுவெளியில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி இல்லத் திருமண நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார். சேலத்தில் பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக், திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெற உள்ளது. அதையொட்டி, இன்று மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் சேதுபதி, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்காக சேலம் வருகை தந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  jason sanjay

ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின்(லைகா) தலைமை பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி லைகா தயாரித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 

Share this story