விஜய் மகன் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்; ஹீரோ யார் தெரியுமா?
பிரபல நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் 'ராயன்' பட நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.vபிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் உள்ள டொரண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்பட தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். இதனைத்தொடர்ந்து லண்டனில் திரைக்கதை குறித்து பி.ஏ படிப்பையும் முடித்துள்ளார். இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக சுபாஸ்கரன் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதுகுறித்து சுபாஸ்கரன் பேசுகையில், “லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் எங்களிடம் கதை கூறிய போது, அந்த கதையில் மக்களை மகிழ்விப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இருந்தது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து வரும் பல நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. சந்தீப் கிஷன் சில மாதங்களுக்கு முன் வெளியான ’ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.