விஜய்யின் 'தி கோட்' படத்துக்கு U/A சான்றிதழ் : புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

Vijay

விஜய் நடித்துள்ள தி கோட் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. ஏ சான்றிதழ் தவிர்க்கப்பட்டுள்ளதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் தி கோட் படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படத்தின் ட்ரெய்லர் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ட்ரெய்லர் 43 மில்லியனுக்கும் அதிகமான பார்வையை கடந்து யூடிபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்திருந்தது. இந்நிலையில் தணிக்கை வாரியத்திற்கு படம் அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 

Share this story