விரைவில் ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’ ?

vijay

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.5ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
நீளம் கருதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் என முன்னரே இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓடிடியில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story