“நான் பொண்ணா இருந்தா வெற்றிமாறனை உஷார் பண்ணிருப்பேன்…” – ஓபனாக பேசிய 'விஜய் சேதுபதி'.

photo

விடுதலை பாகம் 1’ ஒன்று படத்தின் நன்றி நவிழும் நிகழ்வில் விஜய் சேதுபதி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

photo

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவைத்து வருகிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து  வரும் விடுதலை படத்தின் நன்றி நவிழும் நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் விஜய்சேதுபதி.

photo

விஜய் சேதுபதி கூறியதாவது”  இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடக்கத்தின் போது வெற்றிமாறன் சார் என்னிடம் நான் ஒரு நல்ல டைரக்டரா என்பது தெரியாது. ஆனால் நான் ஒரு நல்ல டெய்லர் (எடிட்டர்) அதனால் ஒழுங்காக தைத்துக் கொடுத்து விடுவேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்

ஒரு கதையை இயக்குநர்கள் சொல்லும் வார்த்தைகள் மூலம் நடிகர்கள் எவ்வளவு தூரம் கிரகித்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியம்பெருமாள் வாத்தியாருக்கும் - சுனில் மேனனுக்குமான் காட்சியை படப்பிடிப்பு பண்ணும்போது, வெற்றிமாறன் சார் பரபரப்பாக இருந்தார். என்னால் அந்த சீனை டெலிவரி செய்ய முடியவில்லை. அப்போது அவரிடம் நான் சொன்னேன், சார் நீங்கள் மிகவும் பரபர என இருக்கிறீர்கள். நீங்கள் நிதானமாக இருந்தால் நான் இதை செய்ய முடியும் என்றேன், அதன் பிறகு அவருடைய நிதானத்தின் வழியே அதை ஹேண்டில் செய்தேன்.

photo

யானைகள் பணிவாக இருப்பது அழகாக இருக்கும்; அது போலத்தான் நான் வெற்றிமாறன் சாரை பார்க்கிறேன் அவரிடம் ஒரு தேவை இல்லாத ஒன்று குணம் கூட இல்லை. நல்ல வேளை நான் பெண்ணாக இல்லை, இருந்திருந்தால் அவரை நான் உஷார் செய்திருப்பேன். நான் சரக்கு அடித்துக் கொண்டு போதையில் பேசினாலும் அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன்” என பேசியுள்ளார்.

Share this story