‘விக்ரம்62’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்.

photo

சியான் விக்ரமின் 62வது படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62வது படம் தயாராக உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  சியான் விகரம் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this story