'விக்ரம் 63' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!

vikram 63

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள 63வது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. 

நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக வெளியான 'வீர தீர சூரன் 2' படத்திற்கு பிறகு 'மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது.vikram 63

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீ நிதி ஷெட்டி, பிரியங்கா மோகன் போன்ற நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இப்போது 'தி கோட், லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜூலை முதல் வாரத்தில் படத்தின் பூஜையும் ஜூலை மாத இறுதியில் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 

Share this story