நடிகர் விக்ரமின் 64 வது படம் -இயக்கப்போவது யார் தெரியுமா ?

vikram

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார், ‘96' படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணியில் ‘மெய்யழகன்' படத்தை இயக்கி மீண்டும் முத்திரை பதித்தார். தற்போது விக்ரமின் 64-வது படத்தை இயக்கவிருக்கும் பிரேம்குமார ‘96' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானியை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. நானியிடம் சமீபத்தில் பிரேம்குமார் கதையைக் கூறிவிட்டதாகவும், அதற்கு நானி நன்றாக இருக்கிறது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Share this story