நடக்கவே முடியாது சொன்னாங்க... அந்த வெறி இல்லனா உங்க முன்னாடி நான் இல்ல - விக்ரம்
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அதில் விக்ரம் பேசியது படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அவருடைய ஒப்பனை கலைஞனான டாமிற்கு நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் நடித்த சக நடிகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றி தெரிவித்தார். தங்கலான் படத்தில் ஒப்புக்கொண்டதற்கு காரணம் அவருக்கும் , தங்கலான் கதாப்பாத்திரத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை என்னால் உணர முடிந்தது. என கூறினார்.
அப்பொழுது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார் " எனக்கு நடிப்பில் மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. சின்னதோ பெரிதோ எதோ ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வெறி இருந்தது . ஆனால் கல்லூரி படிக்கும் போது ஒரு நாள் விபத்தில் சிக்கிக் கொண்டேன், என்னுடைய கால் உடைந்தது. அதற்கு பிறகு 3 வருடங்கள் என்னுடைய வாழ்கையை மருத்துவமனையில் கடத்தினேன். 23 அறுவை சிகிச்சை நடந்தது . மருத்துவர்கள் என்னால் எழுந்து நடக்கவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் , கனவும் லட்சியம் மட்டும் எனக்கு இருந்தது. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திட மாட்டோமா என்று ஏங்கினேன். இந்த போராட்டத்திலேயே 10 வருடங்கள் கழிந்தது. நடக்கவே முடியாது என்று சொன்னவர்கள் முன் என்னால் நடக்க முடிந்தது. அனைவரும் நடிப்பு வரவில்லை இந்த துறையை விட்டு வேறு வேலை பாரு என்று சொன்னார்கள். ஆனால் என்னை நானே தேர்த்திக் கொண்டு படங்களில் நடித்தேன். அன்று நான் விட்டு இருந்தால் இன்று உங்கள் முன் நின்று பேசி இருக்க முடியாது.சரி சினிமாவில் இன்றும் வெற்றி பெறாமல் இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்டால், இன்றும் நான் சினிமாவிற்காக முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன்."என்று கூறினார். இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது.