தங்கலான் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம்

தங்கலான் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம். அதிரடி சண்டை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் போர் காட்சிகள் என மிரட்டும் விதமாக படத்தின் டீசர் அமைந்தது. 

தங்கலான் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம்

இந்நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டப்பிங்கை இரண்டு மணி நேரத்தில் விக்ரம் முடித்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  படத்தில் அவருக்கு பெரியளவில் வசனங்கள் இல்லாத காரணத்தால், டப்பிங் பணிகளை விரைவில் முடித்துள்ளார். 
 

Share this story