ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த சூப்பர் அப்டேட் !

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்‘. ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வந்த இந்த படத்தில் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்து வந்தார். விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் ரித்து வர்மா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் பணிகள் தடைப்பட்டது. தற்போது இந்த படத்தின் சிக்கல்கள் தீர்ந்ததால் விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கொடுத்துள்ளார். அதில் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும். டால்பி 9.1.4 ஆடியோ தரப்பில் உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.