சண்டையை மறந்து சமாதானம்- பிரபல தயாரிப்பாளருக்கு உதவிய ‘சியான் விக்ரம்’.

photo

கோலிவுட்டில் பிரபல தயாரிப்பளராக வலம் வந்தவர் வி.ஏ துரை.  சத்தியராஜ் நடிப்பில் வெளியான ‘என்னம்மா கண்ணு’ திரைப்படம் மூலமாக  பிரபலமானார். தொடர்ந்து விக்ரமின் சேது பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரன், ரஜினிகாந்தின் பாபா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அதில் கஜேந்திரன், பாபா படங்களின் தோல்வியால் பண நஷ்டத்தை சந்தித்த துரை அதற்காக சொத்துகளை இழந்து குடும்பத்தால் கைவிடப்பட்டு  ஆதரவற்றநிலைக்கு தள்ளப்பட்டார்.

photo

சமீபத்தில் துரையின் உடல் நலன் குறித்தும் அவரது அவலநிலை குறித்தும் வீடியோ வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலர் அவருக்கு உதவ முன் வந்தனர். குறிப்பாக நீரிழிவு நோயால் அவதிப்படும் துரை காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். செயற்கை கால் பொறுத்த பணனில்லாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் பிதாமகன் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட சண்டையை மறந்து நடிகர் விக்ரம் அவருக்கு  உதவி செய்துள்ளார். இதனை அறிந்த பலருமே விக்ரமின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

Share this story