‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ்-ஆனது எப்படி ?... நடிகர் சூர்யாவின் விளக்கம் !
‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது ஏன் என்று நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற பயங்கரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா பெருங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களில் நடித்த சூர்யாவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய சூர்யாவிடம் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த சூர்யா, நான் இன்று என்னவாக இருந்தாலும், அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அதனால் லோகேஷ் கனகராஜ், தொலைபேசி வழியாக பேசும்போது, ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. கமலுக்காகவே அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று சூர்யா கூறினார்.

