விக்ரம் பிரபு நடிப்பில் 'இறுகப்பற்று'... வித்தியாசமான ப்ரோமோ வீடியோ !

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'இறுகப்பற்று' படத்தின் வித்தியாசமான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.
‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறுகப்பற்று’. இந்த படத்தில் விக்ரம் மற்றும் விதார்த் ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘டாணாக்காரன்’ போன்ற ரசிகர்களின் கவனம் ஈர்த்த பொடன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.