ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு.. ‘பாயும் ஒளி நீ எனக்கு‘ டிரெய்லர் வெளியீடு !

Paayum Oli Nee Yenakku

 விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு, தற்போது ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்பி சினிமாஸ் வெளியிடும் இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Paayum Oli Nee Yenakku

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார். வில்லனாக கன்னட நடிகர் தனஞ்ஜெயா நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, இராம வேலமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சௌத்ரி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா மகன் மஹதி ஸ்வர சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story