விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு'... படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் !

payum oli nee yanakku

 விக்ரம் பிரபுவின் 'பாயும் நீ ஒளி விளக்கு' படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

நடிகர் விக்ரம் பிரபு, நிதானமாக தனது படங்களை நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் பெற்று வருகிறது. கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப பெற்றது. 

payum oli nee yanakku

இந்த படத்தையடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளி வர காத்திருக்கும் திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தை கார்த்திக் சௌத்ரி என்பவர் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார். இவர்களுடன் வில்லனாக கன்னட நடிகர் தனஞ்ஜெயா நடித்துள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா மகன் மஹதி ஸ்வர சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டுகளாக ரிலீசாகமால் கிடக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கு உரிமையை எஸ்பி சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இந்ஊ படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story