போலீசாக அடித்து துவம்சம் செய்யும் விக்ரம் பிரபு.. ‘ரெய்டு’ டீசரை வெளியிட்ட சிம்பு !

விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெய்டு’. போலீஸ் மற்றும் ரவுடிக்கதைக்களம் கொண்ட இந்த படத்தின் கதை, திரைக்கதையை இயக்குனர் முத்தையா எழுதியுள்ளார். இந்த படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.
இப்படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் கிரீன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தூள் கிளப்பும் பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்திகா, ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். புலி அடக்கனும்னா புலிதான் வரணும்.. எங்கே பிரபாகரன் என்று பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டீசர் வரவேற்பை பெற்றுள்ளது.