விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்...!

vikram prabhu

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் துக்லக் தர்பார், மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா, லியோ போன்ற தொடர் வெற்றித்திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.
தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை தயாரித்துள்ளது.

vikram prabhu

இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா இன்று நடைப்பெற்றது.இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார். படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ளவுள்ளார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார். படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story