மீண்டும் வருகிறான் ‘அந்தியன்’... விக்ரம் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் !

anniyan

 விக்ரமின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘அந்நியன்’ மீண்டும் ரீ ரிலீசாகவுள்ளது.

நடிகர் விக்ரம் கெரியரில் முக்கிய படமாக பார்க்கப்படுவது ‘அந்நியன்’. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மூன்று மாறுப்பட்ட தோற்றத்தில் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்நியன், அம்பி, ரெமே என மூன்று கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார் விக்ரம். 

இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து சதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் நோயால் பாதிக்கப்படும் ஒரு ஹீரோவின் கதைதான் இந்த படம். சிறு வயதில் எந்த தவறும் செய்யாத தனது தங்கை இறந்த பிறகு ஏற்படும் மாற்றங்களே இந்த நோயிக்கான காரணமாக படத்தில் காட்டப்பட்டது. மக்களாகிய நாம் சட்டத்தை மதிக்கிறோமா என்று கேள்வி கேட்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. 

anniyan

 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 57 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்காக தேசிய விருது கிடைத்தது.இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் ‘அந்நியன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை மீண்டும் வெளியிட படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 4 கே வெர்சனில் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரீ ரிலீசுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் அந்த படத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story