ஹாரிஸ் ஜெயராஜின் தாறுமாறான இசையில் செகண்ட் சிங்கிள்... 'துருவ நட்சத்திரம்' புதிய அப்டேட் !

dhruva natchathiram

 சியான் விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

dhruva natchathiram

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதால் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள அந்த பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story