விரைவில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ டிரெய்லர்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

dhruvanatchiram

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவநட்சத்திரம்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

dhruvanatchathiram

ஆக்ஷன் அதிரடி காட்சிகளுடன் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. 

விரைவில் வெளியாக இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு சென்சார் செய்யப்பட்ட இந்த டிரெயல் 2 நிமிடம் 38 வினாடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Share this story