காயத்திலிருந்து குணமடைந்த ‘விக்ரம்’... விரைவில் தொடங்குகிறது ‘தங்கலான்’ ஷூட்டிங்

thangalaan
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. 

thangalaan

வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது.  சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. 

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன்  கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது காயமடைந்த விக்ரம் தற்போது பூரண குணமடைந்தார். இதையடுத்து வரும் ஜூன் 17-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் வாரத்துடன் நிறைவுபெற உள்ளது. 

Share this story