ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் 'துருவநட்சத்திரம்'... வேகமாக நடக்கும் பணிகள் !

dhuruva nakshathiram

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவநட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் மற்றும் விக்ரம் கூட்டணியில் தொடங்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

dhuruva nakshathiram

நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. சில பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக இப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

dhuruva nakshathiram

சமீபத்தில் இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து சில முக்கிய காட்சிகளை கெளதம் மேனன் மீண்டும் படமாக்கி வந்தார். இந்த காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. அதனால் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வரும் மே மாதம் 19-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Share this story