அடிதூள்... சியான் விக்ரம் பிறந்தநாளில் செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..‘தங்கலான்’ குறித்து மாஸ் தகவல் !

Thangalaan

விக்ரம் பிறந்தநாளையொட்டி ‘தங்கலான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

Thangalaan

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

கேஜிஎப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை காலை 09.05 மணிக்கு வெளியாகும் அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Share this story