அட்டகாசம்... விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் ‘தங்கலான்’ அப்டேட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Thangalaan

விக்ரம் பிறந்தநாளையொட்டி ‘தங்கலான்’ முக்கிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.  சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.   ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Thangalaan

இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

Share this story