கோலார் தங்க வயலில் பிரம்மாண்டமாக படமாகும் ‘தங்கலான்’.. விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட் !

thangalaan

 விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சியான் விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

thangalaan

 

ப்ரீயட் படமாக உருவாகும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு கேஜிஎப் தங்க வயல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

thangalaan

சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story