நாளை வெளியாகும் விக்ரமின் ‘தங்கலான்’ முக்கிய அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

thangalaan

 விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. 

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் ‘தங்கலான்’.  விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்த  பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

thangalaan

சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப், சென்னை, கடப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story