ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட விக்ரம் - துஷாரா விஜயன்

vikram

இயக்குநர் அருண் குமார் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் வீர தீர சூரன் படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்ற நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார்.

vikram

அந்த வரிசையில், தற்போது நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர். வீர தீர சூரன் படத்தை விளம்பரப்படுத்தும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ரசிகர்கள் விக்ரம் மற்றும் துஷாரா விஜயனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Share this story

News Hub