மகேஷ் பாபு - ராஜமவுலி படத்தில் நடிக்கும் விக்ரம்..?

vikram

மகேஷ் பாபு - ராஜமவுலி கூட்டணியில் பிராம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது.இந்த மூவர் தவிர படத்தில் வேறு யார், யார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனிடையே நடிகர் விக்ரம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.vikram

பான் இந்தியா படங்களாக உருவாகும் படங்களில் மொழிக்கு ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அந்தந்த மொழிகளில் கொண்டு போய் சேர்ப்பது எளிது. அந்த வகையில், தமிழில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் விக்ரம், ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. 


 

Share this story